எரிபொருளுக்காக குவியும் மக்கள்: பாதிப்படையும் வீதி போக்குவரத்து (photos)
எரிபொருளை பெற்றுக்கொள்ள ஒரே நேரத்தில் அதிகளவான மக்கள் குவிவதனால் வீதிகளில் போக்குவரத்து சீரற்று காணப்படுவதுடன் விபத்துக்களும் ஏற்படுவதாக தெரிவிக்கபட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் பெரிய நீலாவணை, மருதமுனை, நற்பிட்டிமுனை, கல்முனை நகர்பகுதி ,சாய்ந்தமருது ,மாளிகைக்காடு பகுதிகளில் இவ்வாறான நிலைமை தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் செயற்பாடு
எரிபொருள் நிலையங்களில் குவிகின்ற மக்கள் எவ்வித ஒழுங்கு முறைகளையும் பின்பற்றாமல் முரண்பாடுகளை ஏற்படுத்துவதாகவும் வீதி மறியலில் ஈடுபட்டு எரிபொருள் நிலையத்தை தாக்க முயற்சிப்பதாவும் தெரிவிக்கபட்டுள்ளது.
இந்த நிலைமை தொடர்வதற்கு முறையான வழிகாட்டல்கள் மற்றும் முகாமைத்துவம் இன்மையே காரணங்களாக கருதப்படுகின்றன.
எரிபொருட்களை கொள்வனவு செய்ய முண்டியடிக்கும் மக்கள் வீதிகளின் இரு மருங்கிலும் தத்தமது வாகனங்களை நிறுத்தி பொதுப்போக்குவரத்தை தடை செய்யும் செயல்களை தினமும் மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களை கட்டுப்படுத்த பொலிஸார் இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் இச்செயற்பாடு கடந்த இரு மாதங்களாக தொடர்ந்து செயற்பட்டு வருவதாக தெரிவிக்கபடுகின்றது.
பொலிஸ் அதிகாரியின் கருத்து
பொலிஸ் உயர் நிலை அதிகாரி கருத்துக்களை தெரிவிக்கையில், “எரிபொருள் கொள்வனவிற்காக வருபவர்கள் 25 வயதிற்கும் மேற்பட்டவர்கள். ஒவ்வொருவரும் முக்கிய தனியார் அரச பணிகளை மேற்கொள்பவர்கள்.
இவர்களுக்கு எம்மால் வழிநடத்த ஒன்றுமில்லை. அவர்களாகவே இந்நிலைமையை உணர வேண்டும். சகலரும் ஒத்துழைப்பு வழங்குவதன் ஊடாகவே அனைவரது வேலைகளையும் சிரமமின்றி மேற்கொள்ள முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் வித்தியாசமான முறையில் பெட்ரோல் பெற்றுக்கொண்ட நபர் |





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
