போர்த்துக்கலில் உருவான மர்மமான வைன் நதி
போர்த்துக்கலில் உள்ள Sao Lorenco de Bairro நகரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெருக்களில் சிவப்பு வைன் நதி ஓடத் தொடங்கியுள்ளது.
இந்த விடயம் அனைவரையும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
நகரத்தில் உள்ள செங்குத்தான மலையிலிருந்து லெவிரா டிஸ்டில்லரிக்கு சொந்தமான மில்லியன் கணக்கான லிட்டர் வைன் கீழே பாய்ந்து தெருக்களில் வழிந்தோடியுள்ளது.
மர்மமான வைன் நதி
இந்நிலையில் நகரத்தின் பாதைகளில் முடிவில்லாத வைன் நதி ஓடுவதை தொடர்பில் வெளியான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
A definitely different type of flood
— Massimo (@Rainmaker1973) September 11, 2023
A river of red wine flows through São Lourenco do Bairro in Portugal when the local distillery's 2.2 million liter tanks burst
Anadia Fire Department blocked the flood diverting it away from the river into a fieldpic.twitter.com/3AhIFt5rEH
இந்த மர்மமான வைன் நதி நகரன் மையப்பகுதியில் உள்ள ஆலையில் இருந்து உருவானது என்றும் அங்கு 2 மில்லியன் லிட்டர் சிவப்பு வைன் கொண்ட பீப்பாய்களை சுமந்து செல்லும் தொட்டிகள் எதிர்பாராதவிதமாக வெடித்ததால் இந்த நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளத்தை நிரப்பக்கூடிய வைன் நதி கசிவு அருகிலுள்ள ஆற்றுக்குச் சென்றதால் சுற்றுச்சூழல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.