இலங்கையில் கோவிட்டை விட மற்றுமொரு ஆபத்து - வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை
இந்தியாவில் பரவி வரும் பூஞ்சை நோய் இலங்கையிலும் பரவும் அபாயம் உள்ளதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டீனியா என அழைக்கப்படும் பூஞ்சை நோய் அறிகுறிகள் ஒரு நருக்கு அல்லது அவரது குடும்பத்தினருக்கு தொற்றியிருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலைகளுக்கு செல்லுமாறு தோல் நோய் விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
கொவிட் தொற்று பரவும் காலப்பகுதியிலேயே இந்த டீனியா எனப்படும் தோலில் ஏற்படும் பூஞ்சை தொற்று வேகமாக பரவுவதனால் இது தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் அரச தகவல் திணைக்களத்தில் இதற்காக விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. பல வருடங்களுக்கு முன்னர் இந்த நோய் சிறுபிள்ளைகளுக்கு இடையில் பரவிய நோய் தொற்றாகும் என தோல் நோய் நிபுணர் வைத்தியர் ஜனக அகரவிட்ட தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த தொற்று பெரியவர்கள் மத்தியில் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. டீனியா நோய் பூஞ்சை வகைகளில் ஒன்றாகும் அதனை RING WARM எனவும் அழைக்கப்படுகின்றது.
தோலின் மேற்பரப்பில் ஏற்படும் அரிப்பின் மூலம் இந்த நோய் பரவுகின்றது. தொடைப்பகுதி, அக்குள் மற்றும் வியர்வை தங்கும் இடங்களில் அதிகம் பரவும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவான பிள்ளைகள் இந்த நோய் தொற்றின் போது அவதானமாக இருக்க வேண்டும்.
இதுவரையில் இந்த நோயின் மாறுப்பாடு மாற்றமடைந்துடைந்துள்ளது.
சுத்தமான இருத்தல் மற்றும் தோலினை இரப்பதின்றி வைப்பதன் மூலம் இதனை தடுப்ப முடியும். உரிய வைத்திய ஆலோசைகளை பின்பற்றினால் இந்த நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள முடிவும் என விசேட வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 7 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
