பதுளை பகுதி மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
எல்ல-வெல்லவாய வீதியில் பாறைகள் சரிந்து விழும் அபாயம் உள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.
ராவண எல்ல வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் மலை உச்சியில் உள்ள பாறைகள் உறுதியற்ற தன்மையால் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடுமையான சேதம்
இரண்டு நாட்களாக எரிந்து கொண்டிருந்த தீயை, தீவிர முயற்சிகளுக்குப் பிறகு இன்று காலை அணைத்துள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதய குமார தெரிவித்துள்ளார்.

முப்படைகள், வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்புத் துறைகளின் ஒத்துழைப்புடன் தீ அணைக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து ராவணா எல்ல வனப்பகுதிக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam