குடும்பத்தில் ஏற்பட்ட மோதல் - பரிதாபமாக உயிரிழந்த நபர்
இரத்தினபுரியில் குடும்ப தகராறு காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எஹெலியகொட பொலிஸ் பிரிவின் பரகடுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த 73 வயதான நபர் உயிரிழந்துள்ளார்.
அவர் எஹெலியகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இது தொடர்பில் எஹெலியகொட பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உயிரிழந்தவர் தனது மகளின் குடும்பத்துடன் வசித்து வந்தார். மகளின் கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி பிள்ளை உள்ளதாகவும், அந்தப் பிள்ளையும் இவர்களுடன் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தந்தையுடன் தகராறு
இந்நிலையில் வீட்டின் உரிமை தொடர்பாக அவரது தந்தையுடன் தகராறு இருந்ததாகவும், அந்த நேரத்தில், உயிரிழந்தவர் தகராறில் இருந்து தப்பிக்க முயன்றபோது, அவரது பேரனால் தள்ளிவிடப்பட்டு தரையில் வீழ்தமையினால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் எஹெலியகொட மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக சந்தேக நபரை கைது செய்ய எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: கதவை திறக்க பிக்பாஸிடம் கூறிய பிரஜன்... பரிதாப நிலையில் விக்ரம்! வெடிக்கும் சண்டை Manithan