வெள்ளம் வடிந்த பிறகு நோய்கள் பரவும் அபாயம் - சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை
இலங்கையின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளநீர் வடியத் தொடங்கியுள்ள நிலையில், அடுத்த இரண்டு வாரங்களில் தொற்றுநோய்கள் அதிகரிக்கக்கூடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளிலும் குடிநீர் மாசடைவதால் நோய்கள் பரவக்கூடும் என சிரேஷ்ட ஆலோசனை வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
எலிக்காய்ச்சல், காச நோய், வயிற்றுப்போக்கு மற்றும் குடல்சார் நோய்கள், டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களே பரவக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மழைக்காலச் சூழல் நுளம்புகள் பெருகுவதற்கு ஏற்றதாக இருப்பதால் டெங்கு அபாயமும் தொடர்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் விடுக்கப்பtடுள்ளன.
காய்ச்சி ஆறிய அல்லது சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மட்டுமே அருந்துமாறும் சேற்று வெள்ளநீரில் இறங்குவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அடுத்த இரண்டு வாரங்கள்
மேலும் தனிநபர் சுகாதாரத்தையும் சுற்றுப்புறத் தூய்மையையாக பேணுமாறும் நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கையில் ஒக்டோபர் 27ஆம் திகதி நள்ளிரவு வரையான தரவுகளின்படி, 105,495 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 81 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
அதிக டெங்கு நோயாளர்கள் பதிவான மாவட்டங்களாக கம்பஹா (22,122), கொழும்பு (20,478) மற்றும் கண்டி (8,440) ஆகியவை உள்ளன.
எனவே, வெள்ளம் வடிந்தாலும் நோய் அபாயம் நீங்கவில்லை. பொதுமக்கள் அடுத்த இரண்டு வாரங்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan