காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் - கவலை வெளியிடும் மக்கள்
காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நீர் மின் உத்தி செய்யும் பிரதான நீர்த்தேக்கங்களில் ஒன்றான காசல்ரி நீர்த்தேக்க வன பாதுகாப்பு பிரதேசத்தில் நேற்று 02ஆம் திகதி மாலை ஏற்பட்ட தீயினால் பல ஏக்கர் வன பிரதேசம் அழிவடையும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளன.
இதனால், நீரூற்றுக்கள் அற்றுப்போய் நீர்தேக்கத்தின் நீர் மட்டம் குறைவடையும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளது.
மக்கள் முன்வைக்கும் கோரிக்கை
அத்தோடு எமது நாட்டுக்கு உரிதான அறிய வகை தாவரங்கள் மூலிகை செடிகள், சிறிய உயிரினங்கள் ஆகியன அழிவடைய கூடிய நிலை ஏற்பட்டுள்ளன.

இந்த தீ வைப்பு மிருகங்களை வேட்டையாடுவதற்கோ அல்லது நிலங்களை அபகரிப்பதற்கோ அல்லது பொழுது போக்குக்காகவோ தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான தீ சம்பவங்கள் காரணமாக நீர் மின் உற்பத்தி குறைவடைவதுடன் நீர் மின் உற்பத்தியும் குறைவடைவதுடன் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் விவசாயத்திற்கு தேவை நீர் பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தோன்றக்கூடும் காட்டு வளம் அழிக்கப்படுகின்றன.
இதனால் வன விலங்குகள் நீர் மற்றும் உணவு தேடி மனிதர்கள் வாழும் பிரதேசங்களை நோக்கி வரக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதனால் இந்த தீ வைப்பு சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஈரானுக்கு எதிராக போராட தயங்கும் ஸ்டார்மர்.. ட்ரம்பின் சீற்றத்தால் பிரித்தானியாவுடன் ஏற்படும் முறுகல்
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam