காலநிலை தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை - சூறாவளி ஏற்படும் அபாயம்
இலங்கையில் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலநிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அந்த நாட்களில் மழை அதிகரிக்குமா அல்லது சூறாவளி ஏற்படுமா என்பது உறுதி செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை அந்தமான் தீவைச் சூழவுள்ள நிலைமை தற்போதும் காணப்படுவதாகவும், காற்றழுத்தத் தாழ்வு நிலை சிறிதளவு வளர்ச்சியடைந்து வருகிறது. இது சூறாவளியாக மாறி இலங்கையை பாதிக்குமா என்பதை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனினும் அவ்வாறான நிலைமை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதக பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
வளிமண்டளவியல் அமைப்பு மற்றும் வழித்தடத்தில் உள்ள நீராவியின் அளவைப் பொறுத்தே அனைத்தும் அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சமீப நாட்களில் ஒரு குளிர் காலநிலை ஏற்பட்டது.

முக்கியமாக இந்தியா முழுவதும் திடீரென சூறாவளியுடன் காற்றின் தோற்றம் ஏற்பட்டது.
பின்னர் சூறாவளி திருகோணமலையிலிருந்து வடகிழக்கு திசையில் சுமார் 370 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. இதன் காரணமாக நாடு முழுவதும் சீரற்ற காலநிலை நிலவியமை குறிப்பிடத்தக்கது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam