அவசரமாக தரையிறக்கப்பட்ட துருக்கிய விமானம்
துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று பார்சிலோனாவின் எல் பிராட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
பயணி ஒருவர், வெடிகுண்டு அச்சுறுத்தல் அடங்கிய வயர்லெஸ் இணைய வலைப்பின்னல் ஒன்றை கண்ட நிலையிலேயே குறித்த விமானம் அவசரமாக ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா எல் பிராட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக
இஸ்தான்புல்லில் இருந்து புறப்பட்ட விமானம் பார்சிலோனாவில் உள்ள அதன் இலக்கை நெருங்கிக் கொண்டிருந்தபோது, "ஒரு பயணி விமானத்திற்குள் ஒரு இணைய அணுகல் புள்ளியை நிறுவி, வெடிகுண்டு மிரட்டலை உள்ளடக்கிய நெட்வொர்க் பெயரை அமைத்திருப்பது கண்டறியப்பட்டது" என்று செய்தித் தொடர்பாளர் யஹ்யா உஸ்டுன் கூறினார்.

இதன் விளைவாக, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், விமான நிலையம் வழக்கம் போல் இயங்குவதாகவும் ஸ்பெயினின் சிவில் காவல் படை தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |