ஈரான் மீது 'ரோரிங் லயன்' தாக்குதல்: 1 இலட்சம் பணியாளர்களை உடனடியாகப் பணிக்கு அழைக்கும் இஸ்ரேல்
ஈரான் மீதான தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் இராணுவம் தனது 'ரோரிங் லயன்' (Roaring Lion) இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுமார் 1,00,000 ரிசர்வ் படை வீரர்களை (Reservists) உடனடியாகப் பணிக்கு அழைப்பதாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே 50,000 வீரர்கள் பணியில் உள்ள நிலையில், பல்வேறு முன்னணிகளில் தயார் நிலையை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் போர் மேகங்கள்! அமைதி ஒப்பந்தத்திற்கான வாய்ப்பு இருந்தும் போரைத் தேர்ந்தெடுத்த ட்ரம்ப்
போர் நிறுத்தம்
இதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதோடு, ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட "போர் நிறுத்தம்" நடைமுறைக்கு வந்த பிறகும் இதுவரை 629 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
2023 ஒக்டோபரில் காசா மீதான போர் தொடங்கியதிலிருந்து இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 70,000-ஐத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.