சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம்! மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

Cricket West Indies cricket team Indian Cricket Team Sanju Samson
By Shadhu Shanker Mar 01, 2026 10:33 PM GMT
Report

மேற்கிந்திய தீவுகளுக்களுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 19.2 ஓவரில் வெற்றி இலக்கை அடைந்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதன்மூலம், அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் இன்று(1) பலப்பரீட்சை நடத்தின.

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்: வெளிநாட்டு நிபுணர்களை நாடும் SLC

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்: வெளிநாட்டு நிபுணர்களை நாடும் SLC

அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதன்படி மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஷாய் ஹோப் மற்றும் சேஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

west indies vs india

முதல் 6 ஓவர்கள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் விக்கெட் இழப்பின்றி 45 ஓட்டங்கள் சேர்த்தது. 33 பந்துகளில் 32 ஓட்டங்கள் எடுத்த ஹோப், வருண் சக்ரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் சேஸ் அதிரடியாக ஆடி ஓட்டங்கள் சேர்க்கையில், களம் வந்த உடனே ஹெட்மயரும் அதிரடியாக ஆடினார். 12 பந்துகளில் 27ஓட்டங்கள் குவித்த ஹெட்மயர், பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் சேஸூம் 40 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம்! மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா | West Indies Vs India Sanju Samson By 5 Wickets

தொடர்ந்து ரூதர்போர்டும் 14 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பிறகு, 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பவல் மற்றும் ஹோல்டர் அதிரடியாக ஆடினர். இருவரும் சேர்ந்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் 76 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

பவல் (34), ஹோல்டர் (37) ஓட்டங்கள் எடுத்திருந்தனர். இதனால், 20 ஓவரில் மேற்கிந்திய தீவு அணி 4 விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இமாலய இலக்கு

196 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா (10), இஷான் கிஷான் (10) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் சஞ்சுசாம்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சூர்யகுமார் யாதவ் (18) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் இழந்தாலும் சஞ்சு சாம்சன் தனது அதிரடியை நிறுத்தவில்லை. 26 பந்துகளில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து, வந்த திலக் வர்மா (27), ஹர்திக் பாண்டியா (14) ஆகியோர் ஓட்டங்கள் குவித்தனர்.

சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம்! மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா | West Indies Vs India Sanju Samson By 5 Wickets

இறுதியில் இந்திய அணி 19.2 ஓவரில் வெற்றி இலக்கை அடைந்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய சஞ்சு சம்சன் 97 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையானார்.

இதன்மூலம், அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றது. மார்ச் 5ம் திகதி நடக்கும் அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் அதிகபட்ச சேஸ் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US