ஜேர்மனியில் வெகுவாக அதிகரித்துள்ள வேலை இல்லாதாவர்களின் எண்ணிக்கை
ஜேர்மனியில்(Germany) வேலை இல்லாதாவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக ஜேர்மனியின் பொருளாதாரமும் பாதிக்கப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜேர்மனியில் ஜூன் மாதத்தில் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை 82,000ஆக இருந்தது. அதுவே, ஜூலை மாதத்தில் 2.8 மில்லியனாக அதிகரித்துள்ளதாக பெடரல் வேலைவாய்ப்பு முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி
ஜேர்மனியின் பலவீனமான பொருளாதார வளர்ச்சியும் கோடை விடுமுறையும் இந்த வேலையின்மை அதிகரிப்புக்கு பகுதியளவுக்கு காரணமாக அமைந்துள்ளது என குறிப்பிடப்படுகின்றது.
மேலும், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் குறுகிய கால வேலைப் பலன்களுக்காக அரசு செய்யும் செலவு எதிர்பார்த்ததை விட அதிகமாகியுள்ளது.
ஜூலை மாதத்தில் மட்டும், 903,000 பேர் வேலையின்மைக்காக அரசு வழங்கும் நிதியுதவியைப் பெற்றுள்ளனர். குறித்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டை விட 105,000 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |