பிரித்தானியாவில் உயர் கல்வி கற்பதற்கு தயாராகவுள்ளோருக்கு வெளியான முக்கிய தகவல்
பிரித்தானியாவில் செப்டம்பர் மாதம் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், உயர் கல்வி கற்பதற்காக பிரித்தானியா செல்வோர், சமீபத்தில் அரசு நடைமுறைக்கு கொண்டுவந்த மாற்றங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில், அப்போதைய பிரித்தானிய உள்துறைச் செயலரான ஜேம்ஸ் கிளெவர்லி, பட்டப்படிப்பு படிப்பதற்காக சர்வதேச மாணவர்கள் பிரித்தானியா விசா பெறுவது தொடர்பில் மீளாய்வு ஒன்றிற்கு அழைப்புவிடுத்திருந்தார்.
கல்வி கட்டணம்
புலம்பெயர்தல் ஆலோசனைக் குழு, மே மாதம் 14ஆம் திகதி மீளாய்வின் முடிவுகளை சமர்ப்பித்தது.
அதன்படி, பட்டப்படிப்பு படிப்பதற்காக சர்வதேச மாணவர்கள் பிரித்தானியா விசா பெறும் முறை மூலமாக, அதிக அளவில் இந்திய மாணவர்கள் பயன் பெற்றுள்ளதாக தெரிவித்தன.

அதே நேரத்தில், பிரித்தானிய பல்கலைக்கழகங்களின் வருவாய், உள்ளூர் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதாலும், ஆராய்ச்சிகளுக்கு நிதி வழங்குவதாலும் ஏற்படும் இழப்புகள் ஆகியவற்றை சந்திக்க, சர்வதேச மாணவர்கள் செலுத்தும் கல்வி கட்டணம் முக்கிய பங்கு வகிப்பதாகவும் மீளாய்வு முடிவுகள் தெரிவித்தன.
ஆகவே, பிரித்தானிய அரசு, சர்வதேச மாணவர்கள் பிரித்தானியாவுக்கு கல்வி கற்க வருவது தொடர்பாக சில விதி மாற்றங்களை அறிவித்தது.
முனைவர் பட்டம்
குறித்த மாற்றங்கள், 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. அதன்படி, பிரித்தானியாவுக்கு கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்கள், தங்களுடன் தங்கள் குடும்பத்தினரை அழைத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும், முனைவர் பட்டம் பெறுவதற்காக வரும் மாணவர்களுக்கும் இந்த புதிய விதியிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அவர்கள், பிரித்தானியாவுக்கு கல்வி கற்க வரும்போது, தங்கள் குடும்பத்தினரையும் உடன் அழைத்துவரலாம். ஆகவே, உயர் கல்வி கற்பதற்காக பிரித்தானியா செல்லும் சர்வதேச மாணவர்கள் அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்களை கருத்தில் கொள்வது சிறந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: பேபின்னு சொன்ன வாயை உடைச்சிடுவேன்... இருக்கையை எட்டி உதைத்த கம்ருதின்! பாருவின் காதல் முறிவு Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
குளிர்காலத்தில் மூச்சுவிடுவதற்கு சிரமப்படுறீங்களா? இந்த பாட்டி வைத்தியத்தை முயற்சித்து பாருங்க Manithan