இலங்கை கடவுச்சீட்டில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கையில் மூன்று நிறங்களில் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் முதலாம் திகதி முதல் புதிய அம்சங்களுடன் கூடிய கடவுச்சீட்டுகள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அதன்படி சாதாரண, உத்தியோகபூர்வ மற்றும் இராஜதந்திரிகளுக்கு என மூன்று வெவ்வேறு நிறங்களில் வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஈ-கடவுச்சீட்டு
இதேவேளை நாட்டின் முதல் ஈ-கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமையினால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஒக்டோபர் நடுப்பகுதியில் ஈ-கடவுச்சீட்டுகளை வருவதற்கு முன்னர் பல தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளன. அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், அவசர பயணத் தேவைகளைக் கொண்ட நபர்களுக்கு கடவுச்சீட்டுகளை வழங்க குடிவரவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
