பிரித்தானிய பிரதமர் பதவிக்கான போட்டி - ரிஷி சுனக் தொடர்ந்தும் முதலிடம்
கன்சர்வேடிவ் கட்சியின் தலைமை பதவி மற்றும் பிரித்தானிய பிரதமர் பதவிக்கான டோரி எம்.பிகளின் மூன்றாம் சுற்று வாக்கெடுப்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் முதலிடம் பிடித்துள்ளார்.
எவ்வாறாயினும், குறைவான வாக்குகளை பெற்ற நிலையில், இந்த போட்டி களத்தில் இருந்து பின்வரிசை உறுப்பினர் டொம் துகென்தாட் வெறியேற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக அமைச்சர் பென்னி மோர்டான்ட் இரண்டாவது இடத்தையும், வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் மூன்றாவது இடத்தையும், முன்னாள் சமத்துவ அமைச்சர் கெமி படேனோக் நான்காவது இடத்தையும் பிடித்தனர்.
நாளைய தினம் மற்றுமொரு வாக்கெடுப்பு
இந்நிலையில், மீதமுள்ள நான்கு வேட்பாளர்களும் செவ்வாய்க்கிழமை மற்றொரு சுற்று வாக்கெடுப்பில் பங்கெடுக்கவுள்ளனர். புதன் அன்று போட்டி களத்தின் வேட்பாளர்களின் எண்ணிக்கை இரண்டாகக் குறைக்கப்படும்.
கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் பின்னர் இறுதிக் கருத்தைக் கூறுவார்கள். கடந்த வியாழன் அன்று நடைபெற்ற இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில் இருந்த இடங்கள் ஒரே மாதிரியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியிலிருந்து வெளியேறிய பின்னர் கருத்து தெரிவித்த துகெந்தட், “எனது குழு, சக ஊழியர்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களின் ஆதரவிற்காக நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
நாடு முழுவதும் எங்களுக்குக் கிடைத்த வரவேற்பைக் கண்டு நான் வியப்படைந்துள்ளேன். மக்கள் தூய்மையான தொடக்கத்திற்குத் தயாராக உள்ளனர், எங்கள் கட்சி அதை நிறைவேற்றி மீண்டும் அரசியலில் நம்பிக்கை வைக்க வேண்டும்” என கூறினார்.