ஈரான் தூதரகத்துக்குச் சென்று இரங்கல் தெரிவித்த ரிஷாத் குழு
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டுப் படைகளின் ஆக்கிரமிப்புத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் மறைவுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
நேற்று(05.03.2026) கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்துக்கு விஜயம் மேற்கொண்ட ரிஷாத் பதியுதீன், அங்குள்ள ஈரானிய தூதுவர் அலிடெர்ஷா டெல்கொஷ்வை நேரில் சந்தித்து தனது அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அரசியல் மற்றும் இராஜதந்திர முக்கியத்துவம்
அத்துடன், தூதரகத்தில் வைக்கப்பட்டிருந்த இரங்கல் பதிவேட்டிலும் தனது செய்தியைப் பதிவு செய்துள்ளார்.

இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் அஷ்ரப் தாஹீர் மற்றும் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தாஹீர் மரிக்கார் ஆகியோரும் கலந்துகொண்டு தமது இரங்கல்களைப் பதிவு செய்தனர்.
ஈரான் மீதான இந்தத் தாக்குதல் மற்றும் அதன் ஆன்மீகத் தலைவரின் மறைவு சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இந்த விஜயம் அரசியல் மற்றும் இராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.


