ரிஷாத் எம்.பியின் தந்தை காலமானார்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் தந்தை அல்ஹாஜ் பதியுதீன் தனது 78 ஆவது வயதில் நேற்று(17.02.2025) திங்கட்கிழமை இரவு காலமானார்.
மன்னார், உப்புக்குளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்போது புத்தளம், தில்லையடி அல் மினாபுரத்தில் வசித்து வருகின்றார்.
இவர் காலஞ்சென்ற அப்துல் றஹ்மான் மரியம் பீவியின் மகனும், ஹாஜியானி ஹலீமத் ஸகிய்யாவின் கணவரும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன், ரியாஜ் பதியுதீன், பாரிஷா பர்வின், பஸ்மிலா பர்வின் காலஞ்சென்ற பைறூஸா பர்வின் ஆகியோரின் தந்தையும் ஆவார்.
நல்லடக்கம்
அன்னாரின் ஜனாஸா இன்று செவ்வாய்க்கிழமை அஸர் தொழுகையை அடுத்து புத்தளம் ரத்மல்யாய அல் காசிமீ மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |