மலையக நீர்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு - வான்கதவுகள் திறப்பு: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை (Photos)
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக காசல்ரீ நீர்தேக்கம் முழுமையாக நிரம்பி மேலதிக நீர் நேற்று இரவு முதல் வான் மேவி பாய்கின்றது.
இதனால் அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதோடு, களனி ஆற்றை பயன்படுத்துபவர்களும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் அவதானமாக இருக்க கோரிக்கை
இதே வேளை நோர்ட்டன் பிரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள விமல சுரேந்திர நீர்த்தேக்கப்பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதானால் அந்த நீர்த்தேக்கத்தில் ஆறு கதவுகள் ஊடாக நீர் வான்பாய்கின்றன.

எனவே, நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மழை காரணமாக கெனியன், லக்ஷபான, நவ லக்ஷபான, பொல்பிட்டிய, மவுஸ்ஸாக்கலை, மேல் கொத்மலை ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், வான்கதவுகளும் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிக்குகளின் போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை: ஏற்பட்டாளர் தித்தகல்லே பிக்குவின் ஊடகவியலாளர் மாநாட்டில்...
சூடுபிடித்துள்ள ஞானசார தேரர் விவகாரம்: விகார மகாதேவி பூங்காவில் முகாமிட்டுள்ள தேரர்கள்! குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்
“இந்த நாட்டில் இரத்தம் சிந்தியது போதும்” மதச் சாயலுக்குள் மீண்டும் பாழாய்ப்போன அரசியல்-புதிய சிறகுகள் அமைப்பு சுட்டிக்காட்டு
Tamizha Tamizha: ஹனிமூன் சென்ற இடத்தில் பெண்ணிற்கு நடந்த துயரம்! பதில் பேச முடியாமல் தொகுப்பாளர் Manithan