வைத்தியசாலையிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் நெகிழ்ச்சி பதிவு
அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்டு உயிரிழந்த காவந்திஸ்ஸ யானைக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது முகநூல் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மகிந்தவின் நெகிழ்ச்சியான பதிவு
இலங்கையிலுள்ள மிகப்பெரிய மற்றும் மிக உயரமான தந்த யானைகளில் ஒன்றாக கருதப்படுகின்ற காவந்திஸ்ஸ யானைக்கு முன் வலது காலில் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்டதாக கூறப்படும் காயத்திற்கு கடந்த 24 ஆம் திகதி பிற்பகல் முதல் சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக உணவு உட்கொள்ளாமை உள்ளிட்ட ஏனைய நோய் அறிகுறிகள் யானையிடம் அவதானிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு (16) உயிரிழந்துள்ளது.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது முகநூல் பக்கத்தில்,
"மாபெரும் வனத்தின் மன்னனான காவந்திஸ்ஸவை வனமே கடைசி முறையாக தழுவியது என்று நான் நம்புகிறேன். இந்த நாட்டின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பௌத்தத்தில் யானைகளுக்கு உள்ள சிறப்பு இடத்தையும் நினைவு கூர்ந்துள்ளார்.
நமது நாட்டின் வரலாற்றில் யானைகள் இடம்பெறாத இடமே இல்லை என்று சுட்டிக்காட்டிய அவர், இந்த மாபெரும் உயிரினத்தை மகாவம்சத்தின் பக்கங்களில் காணலாம் என்றும், ஸ்ரீ தலதா மகா பெரஹேர முடிசூட்டு விழாக்கள் மற்றும் போர்க்களங்களில் யானைகள் இல்லாத இடமே இல்லை என்றும் கூறியுள்ளார்.
நமது கலாச்சாரத்தில் யானை என்பது வரலாறு, மதம், கலை மற்றும் நாட்டுப்புற வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்த ஒரு உயிருள்ள சின்னம், மரியாதைக்குரியது, திருமணத்தின் அடையாளம் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு நபர் என்று வலியுறுத்தியுள்ளார்.
"பெருமை, வலிமை, பொறுமை மற்றும் கருணையைத் தாங்கிய மனித இதயத்துடன் தாய்நாட்டை வடிவமைத்த நமது யானைத் தலைமுறையின் மாபெரும் மன்னன் காவந்திஸ்ஸவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.