கனடா நாட்டிற்கான இ-விசா சேவைகள் மீண்டும் ஆரம்பம்
கனடா நாட்டவர்களுக்கு இ-விசா (மின்னணு) சேவைகளை மீண்டும் வழங்க இந்தியா முடிவு எடுத்திருப்பதாக சர்வதேச ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன.
கடந்த செப்டம்பரில் இந்தியா மற்றும் கனடாவுக்கும் இடையே காலிஸ்தான் தீவிரவாதியின் கொலையை தொடர்ந்து ஏற்ப்பட்ட இராஜதந்திர முரண்பாடுகள் காரணமாக கனடா நாட்டு மக்களுக்ளுக்கான விசா சேவையை செப்டம்பர் 21 அன்று இந்தியா நிறுத்தியது.
விசா சேவை
மேலும் தெரியவருகையில், கனடா குடிமக்களுக்கு கடந்த 2 மாதங்களாக இ-விசா வழங்குவது நிறுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகம் கனடா குடிமக்களுக்கான மின்னணு விசா சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்திய பிரதமர் மோடி மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இடையிலான சந்திப்புக்கு முன்னர் இந்த விசா வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
