கிளிநொச்சி - இரணைமடுக்குளம்....! தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிவந்த உண்மை
கிளிநொச்சி - இரணைமடுக்குள கமக்கார அமைப்புக்களின் சம்மேளனம் என்ற அமைப்பானது, கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகத்தின் கீழ் பதிவு செய்யப்படாமலும், அதற்கான நிர்வாகக் கட்டமைப்பு 2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் புனரமைப்பு செய்யப்படாமலும் இயங்கி வருகின்றமை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
கிளிநொச்சி - இரணைமடுக் குளத்தின் கீழான கமகார அமைப்புகளை கொண்டு உருவாக்கப்பட்ட இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் என்ற அமைப்பானது, இதுவரை கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயக்கத்தின் கீழ் பதிவு செய்யப்படாமல் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகின்றமை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
கணக்கறிக்கைகள்
இவ்வாறு சட்டரீதியாக பதிவு செய்யப்படாத அமைப்பானது வருடம் தோறும் விவசாயிகளிடமிருந்து பெருந்தொகையான நிதிகளை மாவட்ட உயர்நிலை அதிகாரிகளின் உதவியோடு அறவீடு செய்து வருவதுடன் அது தொடர்பான கணக்கறிக்கைகள் எதுவும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக கணக்காய்வு செய்யப்படாமலும் கணக்குகள் வெளிப்படைத்தன்மையின்றியும் பலமில்லியன் ரூபா நிதி முறையற்றவிதத்தில் செலவிடப்பட்டுள்ளன.
இது தவிர குறித்த அமைப்பினுடைய நிர்வாக ஆயுட் காலம் இரண்டு வருடமாக குறிப்பிடப்படுகின்ற போதும் கடந்து 2017 ஆம் ஆண்டுக்கு முன்னர் தெரிவு செய்யப்பட்ட நிர்வாக கட்டமைப்பே அதன் ஆயுட்காலம் 2019 துடன் நிறைவடைந்த போதிலும் குறித்த நிர்வாகமே இன்றுவரை செய்யப்பட்டு வருகின்றது.
அதன் நிர்வாக கட்டமைப்பு புனரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்பதும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
நிதி பங்களிப்புச் செய்தல்
இவ்வாறு பதிவு செய்யப்படாத அமைப்பு ஒன்று முறையற்ற விதத்தில் இயங்கி விவசாயிகளிடம் இருந்து வருடம் தோறும் பலமில்லியன் ரூபாய் நிதியை அறவிட்டு விவசாயிகளின் எந்த தேவைகளுக்கும் பயன்படுத்தாது அதிகாரிகளின் வருடாந்த ஒன்று கூடல் மற்றும் களியாட்ட நிகழ்வுகள் அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளுக்கு நிதி பங்களிப்புச் செய்தல் போன்ற செயற்பாடுகளுக்கு மாத்திரமே குறித்த நிதிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு விவசாயிகளிடமிருந்து அறவிட்ட பெருந்தொகை நிதியைப் பயன் படுத்தி விவசாயிகளினுடைய எந்த பங்கு பற்றதலும் இன்றி விவசாயிகள் எவரும் அழைக்கப்படாமலும் மாவட்டத்தின் அதிகாரிகளை மாத்திரமழைத்து அவர்களுக்காகவே அறுவடை விழா நடத்தி அவர்களை கௌரவித்தமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அதாவது கிளிநொச்சி மாவட்டத்தில் மூவாயிதர்து 333 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் போசாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருப்பதுடன் சுமார் 7313 குடும்பங்கள் உரிய உணவு பாதுகாப்பு இன்றியும் வறுமையில் வாழ்ந்து வருகின்றன.
மக்கள் வறுமை
இவ்வாறு மக்கள் வறுமையில் வாழுகின்ற நிலையிலும் சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்படுதல் என பல்வேறு குறைபாடுகள் இருக்கின்ற போதும் இவ்வாறான நிதிகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்துகின்றமை தொடர்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பதிவு செய்யப்படாத அமைப்பு ஒன்றினாலேயே இவ்வாண்டு சிறுபோக செய்கையின் போது ஏழை விவசாயிகளின் நீர் வரிப்பங்குகள் கமநல சேவை நிலையத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து அவற்றை முறையற்ற விதத்தில் மோசடி செய்து அதனை பெருந்தொகை பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தொடர்பில் கண்டறியப்பட்டு இருக்கின்றது இவ்வாறு தொடர்சியாக ஏழை விவசாயிகளை வஞ்சித்து ஒரு சிலர் மட்டுமே இதன் சுகபோங்களை அனுபவித்து வருவதாக அறிய முடிகின்றது.