யாழில் தீயினால் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு...!
யாழில் வீட்டில் குப்பை கொழுத்திய போது எதிர்பாராத வகையில் ஆடையில் பற்றி எரிந்த தீயினால் காயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சங்கத்தானை, சாவகச்சேரியை சேர்ந்த 2 வயது குழந்தை உள்ளிட்ட நான்கு பிள்ளைகளின்
தாயான சுகந்தன் தயாபரி (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 7ம் திகதி பிற்பகல் 5 மணியளவில் வீட்டில் இருந்து குப்பையினை மண்ணெண்ணெய் ஊற்றி கொழுத்திய போது அவரது ஆடையில் தீப்பற்றியுள்ளது.
மேலதிக சிகிச்சை
காற்று வீசும் திசையில் நின்று இவ்வாறு குப்பைக்கு தீ மூட்டியமையே இதற்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று (12) பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவருக்கு மூன்று ஆண் பிள்ளைகள் மற்றும் ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர். கடைசி பிள்ளைக்கு 2 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த மரணம் தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசரணைகளை மேற்கொண்டு பிரதேப் பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
