பிரித்தானிய விமானப்படையால் நடுவானில் வழிமறிக்கப்பட்ட விமானம்: அச்சமடைந்த பயணிகள்
பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஒன்றை வழிமறித்த பிரித்தானிய விமானப்படை விமானங்கள், அதை பாதுகாப்பாக வேறொரு விமான நிலையத்துக்குக் கொண்டு சென்றதால் விமானப் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
கென்யாவின் தலைநகர் நைரோபியிலிருந்து பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த கென்யன் ஏர்வேஸ் விமானம் ஒன்றை வழிமறித்த பிரித்தானிய விமானப்படை விமானங்கள், அதை ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்துக்கு வழிநடத்தியுள்ளன.
தரையிறக்கச் செய்த போர் விமானங்கள்
அந்த விமானம் பிரான்ஸ் வான்வெளியில் பறக்கும் போது, பிரித்தானிய அதிகாரிகளுக்குக் கிடைத்த எச்சரிக்கையை அடுத்து, உடனடியாக பிரித்தானிய போர் விமானங்கள் அந்த விமானத்தை வழிமறித்துள்ளதாக தெரியவருகின்றது.

விமானம் தரையிறங்கியதும், ஏராளமான ஆயுதம் ஏந்திய பொலிஸார் விமானத்தை சூழந்துகொள்ள, பயணிகள் குழப்பமடைந்துள்ளார்கள்.
இதேவேளை அந்த விமானம் வழிமறிக்கப்பட்டு ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை.
வழிமறிக்கப்பட்ட காரணம்
எதனால் அந்த விமானம் வழிமறிக்கப்பட்டு ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை.

குறித்த விமானத்தில் பிரச்சினை ஏற்பட்டால் மற்ற விமானங்களுக்கும், அருகிலுள்ள கட்டிடங்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்துக்கு அந்த விமானம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், அந்த விமானத்தில் வெடிகுண்டு போன்ற அபாயம் இல்லை என்றும், விமானத்திலிருந்த சில பயணிகள் தொடர்பில் எச்சரிக்கை கிடைத்ததாலேயே பொலிஸார் விமானத்தை தரையிறக்கி சோதனை நடத்தியதாகவும் கென்யா விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 17 மணி நேரம் முன்
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
இனிமே இப்படித்தான்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்! Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri