காசாவில் தொடரும் மனித அவலம்...! இலங்கையின் இறுதி போரை பிரதிபலிக்கும் சம்பவங்கள்
காசாவில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் இலங்கையின் இறுதிபோரின் ஆரம்ப தருணங்களை நினைவுபடுத்துகின்றன என பத்திரிகையாளரும் ஆய்வாளரும் எழுத்தாளருமான மார்க்சோல்டர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சமாதான முயற்சிகளில் நோர்வேயின் பங்களிப்பு என்ற நூலை எழுதிய மார்க்சோல்டர் தனது எக்ஸ் தளத்தின் பதிவு ஒன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி விடயம் குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
இலங்கையின் இறுதி போர்
காசாவில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் இலங்கையின் இறுதிபோரின் ஆரம்ப தருணங்களை நினைவுபடுத்துகின்றன.

அக்காலப்பகுதியில் இலங்கையில் பொதுமக்கள் அரசாங்கம் அறிவித்த உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இதன் பிரதான விளைவு என்னவென்றால் தொடர்ச்சியான வான்வெளி ஆட்டிலறி தரைதாக்குதலால் பொதுமக்கள் உயிரிழப்புகள் பல மடங்காக அதிகரித்தன.
விடுதலைப்புலிகளை பொதுமக்கள் மத்தியில் காணப்பட்ட ஆயுதங்களை இலக்குவைத்து இலங்கை இராணுவத்தினர் இந்த தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். எதிர்வரும் நாட்களில் காசாவில் இதுபோன்ற சூழ்நிலை ஏற்படக்கூடாது என பிரார்த்திக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் உயிரிழப்புகள்
இந்நிலையில் காசாவில் இஸ்ரேல் தாக்குதல்களால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,900 ஐ எட்டியுள்ளது என்று காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,696 ஆக உள்ளது என அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
60% பெண்கள் மற்றும் குழந்தைகள் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் 60% பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
என்னை எப்படி அப்படி கூறலாம், கண்டிப்பாக புகார் அளிப்பேன்... சீரியல் நடிகை கம்பம் மீனா காட்டம் Cineulagam
பிரபல நடிகைக்கும் நடிகர் விஜயகாந்துக்கும் நடக்கவிருந்த திருமணம்.. யார் அந்த நடிகை தெரியுமா? Cineulagam
புதிய வெப் தொடரை இயக்கும் மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட்... யாரெல்லாம் நடிக்கிறாங்க பாருங்க Cineulagam