பாரத் லங்கா வீடமைப்பு திட்டத்தின் அடிக்கல் நாட்டும் விழாவில் கைகலப்பு
நுவரெலியா மாவட்டத்தில் மாஹவோ - வலப்பனை பகுதியில் பாரத் லங்கா வீடமைப்பு திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் நிதி உதவியுடன் நடைபெறும் 'பாரத் லங்கா' வீடமைப்பு திட்டத்தின் கீழ் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் 10,000 வீடுகள் அமைக்கப்படவுள்ளன.
இந்த வீடமைப்பு திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒரு சில மக்களுக்கு மட்டுமே வீடுகள் கட்டி கொடுக்கப்பட உள்ளதாக கூறி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து நேற்றைய தினம் (19.02.2024) கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த வீடமைப்பு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜாவின் பங்கேற்புடன் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அன்புக்கரசி வலையில் சிக்கிய தர்ஷன், பார்கவி சொன்ன விஷயம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam