தமிழர் பகுதியில் அதிகாரிகள் பழிவாங்கப்படும் பண்ணையாளர்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மேய்ச்சல் தரை நிலங்களை கோரி 158 நாட்களுக்கு மேலாக போராடி வரும் மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு மாவட்ட, பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என பண்ணையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு எல்லையில் உள்ள மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் தற்போதைய நிலைமை? மற்றும், குறித்த பிரச்சினை தொடர்பாக மாவட்ட, பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களில் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றமை ஏன்? உள்ளிட்ட ஊடகவியலாளரின் கேள்விகளுக்கு இன்று (20.02.2024) பதில் அளிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
இதன்போது, பண்ணையாளர்கள் மேலும் கூறுகையில், “மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் தொடர்ந்தும் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் செயற்பாடுகள் அதிகரித்து வருகிறது. மார்கழி மாதம் முடிந்து தங்களது பயிர்களை அறுவடை செய்த பின்னர் அத்துமீறிய பயிர் செய்கையாளர்கள் அந்த இடங்களை விட்டு சென்றுவிடுவார்கள் என கூறப்பட்டது.
ஆனால் தற்போது அறுவடை முடிந்துள்ள நிலையில் மீண்டும் பயிர் செய்கையில் ஈடுபடுவதற்காக எமது மாடுகள் மேயும் நிலங்களில் இரசாயன பதார்த்தங்களை வீசி உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் எமது மாடுகள் உணவுக்காக இரசாயன பதார்த்தம் வீசிய புற்கலை உண்டு மரணமடைகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பலரும் கஷ்டப்பட்டு வரும் நிலையில் சுயமாக மாடுகளை வளர்த்து இந்த நாட்டின் பொருளாதாரத்திற்காக பாடுபடும் எமது பொருளாதாரத்தையும் அழிக்கின்றனர்" என அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பண்ணையாளர்கள் கருத்து தெரிவிக்கையில்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 5 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
