திருகோணமலையில் நியாயமற்ற விலையில் அரிசி விற்பனை: எடுக்கப்பட்ட நடவடிக்கை
அரிசி விலையை அதிகரித்து விற்றதால் திருகோணமலையில் இரண்டு கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் இன்று(12) விசேட சுற்றிவலைப்பொன்றை மேற்கொண்டிருந்த போதே இவ்வாறு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒரு கடையில் சிவப்பு அரிசி 280 ரூபாவிற்கும் இன்னொரு கடையில் வெள்ளை பச்சை அரிசி 270 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதை உறுதிப்படுத்திய பின்பு இரு கடைகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் திருகோணமலை மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தண்டப்பணம்
கடை உரிமையாளர்கள், ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் ரூபாய் தண்டப்பணம் செலுத்த நேரிடலாம் என நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர்.

வவுனியாவில் அறுவடை செய்யப்படும் உளுந்துக்கு வழங்கப்படும் விலை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam