வவுனியாவில் அறுவடை செய்யப்படும் உளுந்துக்கு வழங்கப்படும் விலை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
வவுனியா (Vavuniya) மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் உளுந்துக்கு உரிய விலை கிடைக்கவில்லை என பிரதி விவசாயப் பணிப்பாளர் மாலினி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
உளுந்து அறுவடை தொடர்பில் இன்று (12.01.2025) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "2024 - 2025ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் பெரும் போகத்தில் 5650 ஹெக்டேயர் அளவில் வவுனியா மாவட்டத்தில் உளுந்து செய்கை பண்ணப்பட்டது.
உரிய விலை
வவுனியாவில் விவசாயிகள் தற்போது உளுந்து அறுவடையை மேற்கொள்கிறார்கள். அவர்களுக்கு தற்போது உரிய விலை கிடைக்கவில்லை என்பது குறையாகவுள்ளது. உண்மையில் அறுவடைக் காலத்தில் விற்பனைக்கு கொண்டு செல்லும் போது விலை குறைவாக தான் இருக்கும்.

உளுந்தை பத்திரமாக, வண்டு மற்றும் பூச்சி தாக்கம் இல்லாது பாதுகாக்க வேண்டும். விலை அதிகரிக்கும் காலங்களில் அதனை விற்பனை செய்ய வேண்டும். காற்று புகாவண்ணம் 300 கேச் தடிப்புள்ள பொலித்தீனில் பொதி செய்து வைத்திருக்க முடியும்.
அல்லது 5 லீற்றர் குடிநீர் வரும் போத்தலில் கூட உளுந்தைப் போட்டு பாதுகாப்பாக மூடி வைக்க முடியும். அரசாங்கம் உளுந்திற்கான விலை தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri