யாழிலிருந்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சென்று திரும்பியவர் மாயம்
யாழ்ப்பாணத்திலிருந்து, விசா தொடர்பான அலுவல்கள் நிமித்தம், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்குச் சென்று அலுவல்களை நிறைவு செய்து விட்டு வீடு திரும்பிய முதியவர் காணாமல் போயுள்ளார்.
குறித்த முதியவர் நேற்று முன் தினம் (23.10.2023) கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சென்று திரும்பிய நிலையில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் விசாரணை
கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சென்று அங்கு விசா தொடர்பான அலுவல்களை நிறைவு செய்து விட்டு ஆட்டுப்பட்டித் தெருவில் உள்ள விடுதி ஒன்றிற்கு உறவினர்களுடன் முதியவர் திரும்பியுள்ளார்.
அன்றைய தினம் பிற்பகல் 3 மணியளவில் கடைக்குச் செல்வதாக தெரிவித்து விடுதியிலிருந்து புறப்பட்டவர் இன்று வரை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

விடுதியிலிருந்து புறப்பட்டுச் செல்லும் போது வெள்ளை நிற சட்டை மற்றும் வேட்டி அணிந்திருந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0774354409 எனும் தொலைபேசி இலக்கத்திறகு அறிவிக்குமாறும் உறவினர்களால் கோரப்பட்டுள்ளது.
விறுவிறுப்பான ஆட்டத்தில் மெஸ்ஸியால் தப்பிப்பிழைத்த அர்ஜென்டினா: இதயம் நொறுங்கிய எகிப்து News Lankasri
கருப்பு பட மாபெரும் வெற்றி, அடுத்த பட சம்பளத்தை உயர்த்தினாரா நடிகர் சூர்யா?... அதுவும் இத்தனை கோடியா? Cineulagam