போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான சில்லறை விலை!
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த விலை ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 500 மில்லி லீற்றர் தொடக்கம் 999 மில்லி லீற்றர் வரையான குடிநீர் போத்தலின் விலை 70 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிர்ணய விலை
அத்துடன் 1 லீற்றர் தொடக்கம் 1.499 லீற்றர் வரையான குடிநீர் போத்தல் 100 ரூபா எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் 1.5 லீற்றர் தொடக்கம் 1.999 லீற்றர் வரையான குடிநீர் போத்தலின் விலை 130 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2 லீற்றர் தொடக்கம் 2.499 லீற்றர் வரையான குடிநீர் போத்தலின் விலை 160 ரூபா எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 5 லீற்றர் தொடக்கம் 6.999 லீற்றர் வரையான குடிநீர் போத்தலின் விலை 350 ரூபா எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
