இலங்கை அணியில் இருந்து விடுவிக்கப்பபட்ட நான்கு வீரர்கள்
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் போட்டிக்கு முன்னதாக குசல் மெண்டிஸ், பத்தும் நிசாங்க, கமிந்து மெண்டிஸ் மற்றும் அசித்த பெர்னாண்டோ ஆகியோரை அணியில் இருந்து விடுவிக்க இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது.
இந்த வீரர்கள் உபாதைகளில் இருந்து குணமாவதற்கும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராவதற்கும், போதுமான கால அவகாசம் வழங்குதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அவர்களுக்குப் பதிலாக நுவனிது பெர்னாண்டோ, லஹிரு உதார, மற்றும் எசான் மலிங்க ஆகியோர் மாற்று வீரர்களாக ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இறுதி ஒருநாள் போட்டி
இதேவேளை, இலங்கை அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான ஒருநாள் தொடரின் மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டி நவம்பர் 19ஆம் திகதி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
