ஐந்தாவது கோவிட் அலையை தடுக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள தீர்மானங்கள்
Srilanka
Covid-19
People
Covid vaccine
By Ajith
இலங்கை, ஐந்தாவது கோவிட் அலையை நோக்கி நகர்வதைத் தடுக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பல யோசனைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி,
- நாட்டின் மக்கள்தொகையில் 70% க்கும் அதிகமானவர்களுக்கு முழுமையான தடுப்பூசி மற்றும் பாடசாலை மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படவேண்டும்.
- தடுப்பூசி தொடர்பான தேசிய ஆலோசனைக்குழுவின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நவம்பர் தொடக்கத்திலிருந்து, இரண்டு அளவுகளையும் பெற்றவர்களுக்கு மூன்றாவது முன்னுரிமை பூஸ்டர் அளவு தடுப்பூசி செயல்முறை ஆரம்பிக்கப்பட வேண்டும்.
- சுகாதார வழிகாட்டுதல்களின்படி புதிய இயல்பான வாழ்க்கை முறைக்கு மக்கள் செல்ல வேண்டும்.
- தடுப்பூசி செலுத்தப்பட்ட போதிலும், அறிகுறியற்ற நோயாளர்களை அடையாளம் காண இலவசமாகக் கிடைக்கும் புதிய மற்றும் எளிய கோவிட் சோதனை முறைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
- சமூகத்தில் வளர்ந்து வரும் கோவிட் கொத்தணிகளை அடையாளம் காண, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய, சீரற்ற சமூக மாதிரி சோதனைகளை அறிவியல் பூர்வமாகவும், ஒரே மாதிரியாகவும் நடத்த வேண்டும்.
- விஞ்ஞான மற்றும் சீரான முறையில் மரபணு சோதனையை நடத்துவதன் மூலம் சாத்தியமான புதிய விகாரங்களை அடையாளம் கண்டு, ஆரம்பத்திலிருந்தே சமூகத்தில் பரவுவதைத் தடுக்க உத்திகளைச் செயல்படுத்த வேண்டும் என்பதே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயல்முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US