கல்வி திட்டங்களை மீளாய்வு செய்ய தீர்மானம்
கடந்த 5 ஆண்டுகளில் கல்வித்துறையில் (Education) நடைமுறைப்படுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான பல்வேறு திட்டங்களை மீளாய்வு செய்ய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
தேசிய கல்வி நிறுவனம் (NIE) உள்ளிட்ட பல்வேறு கல்வி துறைசார் நிறுவனங்களால் அண்மைக்காலமாக கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான பல்வேறு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி சீர்திருத்த முன்மொழிவு
எனினும், அந்த முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்படும் நிலையை எட்டவில்லை.
இந்த முன்மொழிவுகள் மற்றும் வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்த பின்னர், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க புதிய கல்வி சீர்திருத்த முன்மொழிவு முன்வைக்கப்படும் என்று செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 1 மணி நேரம் முன்

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri
