கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு வர்த்தக நிலையங்கள் உரிய முறையில் பொருட்களை விற்பனை செய்கின்றனவா என்பதை கண்டறிய விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபை (Consumer Affairs Authority) இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் காலாவதியான பொருட்களை சந்தையில் விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் முறைப்பாடுகள்
ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 25ஆம் திகதி வரையில் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனை நிலையங்கள் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால் 1977 என்ற இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் தங்களது முறைப்பாடுகளை செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ் புத்தாண்டு இந்த 3 ராசியினரை கோடீஸ்வரராக மாற்றப்போகுதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

2 முறை யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி.. முதலில் ஐபிஎஸ் ஆகி பின்னர் ஐஏஎஸ் அதிகாரியான நபர் யார்? News Lankasri

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan
