தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை! வெளியான காரணம்
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்க உறுப்பினர்களுக்கும், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு மாம்பழம் விற்பனை செய்ய வரும் வியாபாரிகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
புதிய நடைமுறை
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தினுள் புதிய போக்குவரத்து திட்டம் ஒன்று நடைமுறைபடுத்தப்பட்டு, மரக்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்காரணமாவே குறித்த இரு குழுவினருக்கும் இடையில் நேற்று(21.11.2024) வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட முறையை புறக்கணிக்கும் கடை உரிமையாளர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கவும், கடைகளை தற்காலிகமாக மூடவும் பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்கம் முடிவு செய்துள்ளது.
தீர்மானம்
இவ்வாறு தற்காலிகமாக கடைகளை மூடுவதற்கு எடுத்த தீர்மானத்தால், மாம்பழம் விற்பனை செய்ய வந்த வியாபாரிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதால் இந்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது பொலிஸார் அவ்விடத்திற்கு வருகை தந்து நிலைமையை கட்டுப்படுத்தியதாக கூறப்படுகின்றது.
மேலும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு மாம்பழம் விற்பனை செய்ய வரும் வியாபாரிகள், மிகுந்த சிரமப்பட்டு கொண்டு வரும் மாம்பழங்களை விற்பனை செய்ய இடமில்லாததால், லொறிகளிலும், கடைகளுக்கு அருகில் தரையிலும் மாம்பழங்களை விற்பனை செய்வதாக கவலை தெரிவித்துள்ளனர்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 15 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
