பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் உள்ள தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்றுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் அடுத்த மாதம் 13ஆம் திகதியுடன் நிறைவடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கற்றல் செயற்பாடுகள்
இந்தநிலையில் அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி 02 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ,மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 17ஆம் திகதி வரை இடம்பெறும் என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
