மனோவிற்காக சஜித்திடம் கோரிக்கையை முன்வைத்துள்ள செந்தில் தொண்டமான்
இலங்கையின் புதிய நாடாளுமன்றத்தில் கொழும்பு மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தை ஐக்கிய மக்கள் சக்தி உறுதிப்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொழும்பின் ஊடகம் ஒன்றுடன் அவர் இந்த கருத்தை பகிர்ந்துள்ளார்.
மலையக மாவட்டங்கள் அனைத்திலும் தமிழ் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்ட போதிலும், கொழும்பு மற்றும் கண்டி மாவட்டங்களில் தமிழ் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவில்லை.
வெவ்வேறு அரசியல் கருத்துக்கள்
இந்தநிலையில், கொழும்பு மாவட்டம் மற்றும் மேல்மாகாணத்தில் வாழும் தமிழர்களுக்கு நாடாளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதி ஒருவர் தேவை என்பதை எடுத்துரைத்துள்ள செந்தில் தொண்டமான், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனே அதற்கு பொருத்தமானவர் என தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ஏனைய வேட்பாளர்களை விட, மனோ கணேசன் அதிக தமிழ் வாக்குகளை பெற்றுள்ளதாக செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் முற்போக்கு முன்னணிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் வெவ்வேறு அரசியல் கருத்துக்கள் இருந்தாலும், நாடாளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதில் அவை ஒரே கொள்கையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri
பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா 6 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தார்? வைரலாகும் புகைப்படம் Manithan