புதிய தீர்மானம்! பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பு
புதிதாக பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய 9000 பேரை, புதிய பொலிஸ் உத்தியோகத்தர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் எண்ணிக்கை
இவர்கள், போக்குவரத்து கட்டுப்பாடு, குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு என்பனவற்றுக்காக கடமையாற்ற வேண்டுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள தற்போதைய அதிகாரிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள்
இதன்காரணமாகவே புதிய பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிக்க தீர்மானித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

ஜனாதிபதியின் 'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்தின் ஊடாக, நாடு முழுவதும் போக்குவரத்து, குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
குறித்த கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் பொலிஸார் தீவிரமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri