யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எடுத்துள்ள தீர்மானம்

Jaffna University of Jaffna Northern Province of Sri Lanka
By Theepan Jan 27, 2025 05:50 PM GMT
Report

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று முதல் காலவரையின்றி விரிவுரைகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அவசர கலந்துரையாடலுக்கு பின்னர் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சங்கத்தினரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்  இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி

பதவி விலகல்

அறிக்கையின் முழு வடிவம் வருமாறு, அண்மையில் இடம்பெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவைக் கூட்டத்தின் பின்னர் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடாதிபதி தனது பதவியிலிருந்து விலகியதையடுத்து பல்கலைக்கழகம் பற்றிய பல கருத்துக்கள் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளியாகி இருந்தன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எடுத்துள்ள தீர்மானம் | Resolution Taken By Jaffna University Lecturers

இந்த நிலையில் நிலைமை குறித்துக் கலந்துரையாடும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் விசேட பொதுக்குழுக் கூட்டம் திங்கட்கிழமை காலை 10 மணிக்குக் கலைப்பீடத்தில் இடம்பெற்றது.

மீறல்களிலும், வன்முறைகளிலும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தினை பாதிக்கும் வகையிலும், உடைமைச் சேதங்களை விளைவிப்பதிலும் சீரழிவு மிக்க நடவடிக்கைகளிலும் ஈடுபடும் மாணவர்களிற்கு எதிராகப் பல்கலைக்கழகத்தின் நிருவாகம் கடந்த காலத்திலே உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமை குறித்து இந்தக் கூட்டத்திலே பல உறுப்பினர்களும் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

யாழில் மண்கலந்த நீர் விநியோகம்!

யாழில் மண்கலந்த நீர் விநியோகம்!

வகுப்புப் புறக்கணிப்பு

திட்டமிட்ட முறையில் விசாரணைகளிலே தாமதங்கள் ஏற்படுத்தப்பட்டு மாணவர்கள் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தண்டனைகளில் இருந்து தப்பித்துச் செல்ல நிர்வாகம் வழிசமைத்துக் கொடுப்பதாகக் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எடுத்துள்ள தீர்மானம் | Resolution Taken By Jaffna University Lecturers

தண்டனைகளின் நோக்கம் மாணவர்களை விரோதிப்பது அல்ல; மாறாக தாம் செய்யும் தவறுகளை மாணவர்கள் உணர்ந்து எதிர்காலத்திலே செம்மையாகச் செயற்படும் வகையில் ஊக்குவிப்பதே என்பதுவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

கூட்டத்தின் இறுதியில் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இன்று திங்கட்கிழமை அன்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஓர் அடையாள வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுவது எனவும், நாளை செவ்வாய்க்கிழமை முதல் தொடர் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுவதும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

மகிந்தவின் உடல் பதப்படுத்தப்பட வேண்டும்! விடுக்கப்பட்ட கோரிக்கை

மகிந்தவின் உடல் பதப்படுத்தப்பட வேண்டும்! விடுக்கப்பட்ட கோரிக்கை

கோரிக்கைகள்

1. மோசமான செயல்களிலே ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பதவி விலகிய  கலைப் பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் முன்வைத்த கோரிக்கை உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.அவர் தனது பதவி விலகலினை வாபஸ் பெற்று மீளவும் பீடாதிபதிப் பொறுப்பினை ஏற்பதற்கு உரிய ஒரு சூழலினைப் பல்கலைக்கழக நிர்வாகம் பல்கலைக்கழகத்திலே ஏற்படுத்த வேண்டும்.

2. மாணவர்களுக்கு எதிரான‌ ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற பேரவைக் கூட்டத்திலே மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் உடனடியாக வாபஸ் பெறப்படல் வேண்டும்.

3. மோசமான செயல்களிலே ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் உறுதியாக இருக்கும் போதிலும், அவற்றினைப் பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் வேண்டுமென்றே கால தாமதங்களை ஏற்படுத்தல், வேண்டுமென்றே நிருவாகத் தவறுகளை இழைத்தல் போன்ற செயன்முறைகள் மூலம் மீறல்களிலே ஈடுபட்ட மாணவர்கள் தண்டனையில் இருந்து தப்புவதற்கு நிருவாகம் வழிசமைத்துக் கொடுக்கும் போக்கு உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்படல் வேண்டும்.

4. இரண்டு மாணவர்கள் கணித புள்ளிவிபரவியல் துறையின் வாயிலில் இருந்த பூட்டினை உடைத்தமை தொடர்பிலே இடம்பெற்ற விசாரணையினை வேண்டுமென்றே தாமதமடையச் செய்த பல்கலைக்கழக நிருவாகிகளுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும். அதே போன்று கலைப் பீடத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை வேண்டுமென்றே இழுத்தடிப்போர் மீதும் விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். இது தொடர்பிலே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலையீட்டினையும் கோருவதற்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.

5. கலைப்பீடத்திலும், விஞ்ஞானப் பீடத்திலும் மோசமான செயல்களிலே ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளுவதில் இருந்து தவறிய பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களின் மீது எமது ஆசிரியர் சங்கம் நம்பிக்கையினை இழந்துள்ளது. எனவே எல்லா வெளிவாரி உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும். புதிய உறுப்பினர்கள் பேரவைக்கு நியமிக்கப்பட வேண்டும்.இது தொடர்பான சங்கத்தின் விண்ணப்பம் ஒன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும், உயர் கல்வி அமைச்சுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

மேற்கூறிய ஐந்து கோரிக்கைகளையும் உள்ளடக்கிய கடிதம் ஒன்று பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கும், எல்லாப் பீடாதிபதிகளுக்கும் ஆசிரியர் சங்கத்தினால், இன்றைய கூட்டத்திலே மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் ஒன்றுக்கு அமைய‌ அனுப்பிவைக்கப்பட்டது.என்றுள்ளது.

கோர விபத்தில் பரிதாபமாக பலியான பெண்

கோர விபத்தில் பரிதாபமாக பலியான பெண்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், Toronto, Canada

03 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

05 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US