ஐ.நாவால் வெளியிடப்படவுள்ள பிரேரணை மிக பலவீனமானது - யோதிலிங்கம்
ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்கனவே கொண்டு வரப்பட்ட தீர்மானம் மிக மிக பலவீனமானது. அதனை மேலும் பலவீனமாக்கும் அறிக்கையே உறுப்பு நாடுகளால் கொண்டு வரப்படவிருப்பதாக அரசியல் ஆய்வாளர் சி.ஆ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
செம்மணியில் இடம் பெறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மேற்கொண்டுவரும் தொடர் போராட்டத்தில் கலந்துகொண்டபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம்
அவர் மேலும் தெரிவித்தாவது,
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையை இல்லாமல் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் ஒவ்வொரு உறுப்பு நாடுகளிடமும் சென்று அதனை கைவிடுமாறு கேட்டு வருகிறது.
ஆனால், எமது அரசியல்வாதிகள் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்றும் தெரிவித்ததுடன் இதனை ஒருமித்த குரலில் ஐக்கிய நாடுகள் சபை வரை எமது அரசியல்வாதிகள் கொண்டு செல்வதன் மூலமே எமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



