அரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் லஞ்சம் பெறும் அரசாங்க ஊழியர்கள், சம்பள மட்டங்களை சுட்டிக்காட்ட முடியாது என இலஞ்ச ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
லஞ்சம் பெறும் ஊழியர்கள் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்து தப்பித்துக்கொள்ள முயல்வதாக ஆணைக்குழுவின் தலைவர் நீதிபதி நீல் இத்தவாலா தெரிவித்துள்ளார்.
இலங்கை சுற்றுச்சூழல் நிபுணர்கள் நிறுவனம் மற்றும் இலங்கை நிர்வாக சேவை சங்கம் இணைந்து நடத்திய நிகழ்வொன்றில் உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்முடுள்ளார்.
அரச ஊதியங்கள்
“நாட்டில் சமகாலத்தில் அரச ஊதியங்கள் நியாயமான மற்றும் போதுமான அளவில் உள்ளன. இது அரசாங்கத்தால் பெரிய முன்னேற்றமாக கருதப்பட வேண்டும்.
பொதுமக்கள் எப்போதும் குறைந்த ஊதியத்தை ஊழலுக்கு காரணமாகக் கூறுகிறார்கள். ஆனால் இனி அவ்வாறு கூறுவது செல்லுபடியாகாது.
அனைத்து அரச ஊழியர்களுக்கும், குறிப்பாக உயர் பதவியில் உள்ளவர்களுக்கும் நியாயமான ஊதியம் வழங்கப்படுகிறது.
தனியார் துறையை ஒப்பிடும்போதும் இது தெளிவாக தெரிவதாக" ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்துக்கள், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணையத்தின் ஒரு வருட கால தேசிய ஊழல் அறிக்கையின் விவரங்களுடன் இணைந்து வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



