பருத்தித்துறை பிரதேச சபையில் பிரஜா சக்திக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம்
பிரஜா சக்திக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளரல் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு 10 வாக்குகள் ஆதரவாகவும், 5 வாக்குகள் நடுநிலமையாகவும், 4 வாக்குகள் எதிராகவும், ஒருவர் சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய விடயங்கள்
பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய ஆண்டிற்கான பருத்தித்துறை பிரதேச சபை அமர்வு தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் காலை 9:45 மணியளவில் பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.

இதில் தேசிய மக்கள் சக்தியால் கொண்டுவரப்பட்ட பிரஜா சக்தி திட்டத்தை எதிர்ப்பதென்று தவிசாளரால் கொண்டுவரப்பட்ட பிரேரணை 10 ஆதரவு வாக்குகளாலும், எதிராகவும் 4 வாக்குகளும், நடுநிலையாகவும் 5 வாக்குகளும் செலுத்தப்பட்டிருந்த நிலையில் பிரேரணை நிறைவேறியுள்ளது.
அதனை தொடர்ந்து, பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக சபையின் குழு ஒன்று ஆய்வு செய்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மணல்காடு சமூக காடாக காணப்படும் சவுக்கம் காட்டினை சுற்றுலா நோக்களுக்காக பருத்தித்துறை பிரதேச சபையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam