ரணிலுக்கு சட்டத்தில் தப்பிக்க வாய்ப்பு வழங்குமா ஜே.வி.பி..! பட்டலந்தவில் திண்டாடும் அரசு
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த அறிக்கையில் காணப்படும் சட்டத்திட்டங்களை நடைமுறைப்படுத்தினால் அரசாங்கம் பாரிய சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிடலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்வதற்கு சட்ட மா அதிபரினால் நான்கு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபருக்கு அனுப்பப்பட்ட அறிக்கை
பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை, கடந்த வருடம் 2025 மார்ச் மாதம் 14 ஆம் திகதி சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த அறிக்கை மீதான இரண்டு நாள் விவாதம் இடம்பெற்றது.
இந்நிலையிலேயே, பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த செயற்பாடுகளின் பின்னரே அரசாங்கத்திற்கு பாரிய சிக்கல் ஏற்பட்டது.
குறித்த அறிக்கையில் ஜே.வி.பியால் 88-89 ஆம் ஆண்டுகளில் அரசுக்கு எதிராக மேற்கொண்ட கிளர்ச்சி மற்றும் அவர்களால் கொல்லப்பட்டவர்கள் தொடர்பில் எவ்வித மன்னிப்பும் வழங்க முடியாது.
என்று குறிப்பிடுவதோடு ஜே.வி.பியால் 1987 முதல் 1990 முதல் அரச அதிகாரத்தை கைப்பற்றி மேற்கொண்ட பயங்கரவாத நடவடிக்கைகளால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பை வாய், கண் மூடி பார்த்து கொண்டிருக்க முடியாது.
ஆனால் அரசாங்கம் நீதித்துறைக்கு அப்பால் அதற்கெதிராக செயற்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம் என்று அந்த அறிக்கையில் இரு பக்கங்களின் அராஜக செயற்பாடுகளை கண்டித்துள்ளதோடு அன்றை அரசாங்கம் இதை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கையை ஓரளவு நியாயப்படுத்தியுள்ளது.
என்பிபி அரசுக்கு ஏற்படப்போகும் ஆபத்து
பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது. நாடாளுமன்றத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், அரசியலமைப்பு சட்டத்தின் படி இது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கு பின்னர் என்ன செய்ய வேண்டியுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ரணில் விக்ரமசிங்க கொலையாளி என நிரூபிக்கப்பட வேண்டும் ஆனால், ஜே.வி.பி செய்த அரசுக்கு எதிரான அனைத்து செயற்பாடுகளும் ஏற்கொள்ளப்பட்டால் என்ன நடக்கும்.

அரசியலமைப்புச் சட்டத்தில் பொது விதிகளின் 157 ஆவது 1-2-3 இன் கீழ் ஒரு கட்சி அல்லது தனிநபர்,ஒரு குழு அரசுக்கு எதிராக மேற்கொண்ட பயங்கரவாத செயற்பாடுகளுக்கு தண்டனையாக கட்சி தடைச் செய்யப்பட்டு அதன் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படலாம்.
மேலும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி பதவிகள் கூட பறிக்கப்படலாம். ஒருபக்கம் ரணில் தண்டிக்கப்படுவதோடு ஜே.வி.பி சார்பான அரசுக்கு எதுவும் நடக்கலாம்.
இந்த காரணங்கள் மிகவும் பாரதூரமானதாகும். அடுத்து அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என தெரியாத தன்மையே காணப்படுகிறது.
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
சீனாவா அமெரிக்காவா என தெரிவு செய்ய வேண்டிய அவசியம் பிரித்தானியாவிற்கு இல்லை- ஸ்டார்மர் News Lankasri