பேச்சுவார்த்தை நடத்த தயார்! சுயாதீனமாக செயற்படும் 10 அரசியல் கட்சிகள் தீர்மானம்
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரென நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 10 அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவிக்கையில், எமது கோரிக்கைக்கு ஜனாதிபதி அளிக்கும் பதிலின் அடிப்படையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது குறித்து தீர்மானம் எடுப்போம்.
10 கட்சிகளுக்கு இடையில் கூட்டம்
| ஜனாதிபதிக்கு சஜித் வழங்கியுள்ள எழுத்துமூல அறிவிப்பு |
நாடாளுமன்றத்தை பிரதிநித்துவப்படுத்தும் 10 கட்சிகளுக்கு இடையில் நேற்று இரவு இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள சந்திப்பின் போது ஜனாதிபதியிடம் எமது யோசனைகளை முன்வைக்கவுள்ளோம்.
பிரதான கோரிக்கை
நாட்டின் இறைமையையும், தேசிய வளங்களையும் பாதுகாத்து ஜனாதிபதி தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்பதே தமது பிரதான கோரிக்கை.

வேலைத்திட்டமின்றி அனைத்துக் கட்சி அரசாங்கத்தினால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam