சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது குறித்து வெளியான தகவல்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பில் அடுத்த வாரத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்றுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் நுண்கலை பாடத்துக்கான செயன்முறைப் பரீட்சை இதுவரை இடம்பெறவில்லை என்றும் அதன் காரணமாகவே க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தாமதமாவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஆசிரியர்கள் பணிப் பகிஷ்கரிப்புப் போராட் டத்தை மேற்கொண்டுள்ள நிலையில் நுண்கலை செயன்முறைப் பரீட்சை நடத்துவதற்கு முடியாதுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதன் காரணமாக க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபே றுகளை வெளியிடுவது தாமதமாவதாகவும் எவ்வாறெனினும் அடுத்த வாரத்தில் அது தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற் கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
