தேசிய நூலகம் மற்றும் ஆவணவாக்கல் சபையின் தலைவர் பதவி விலகல்
தேசிய நூலகம் மற்றும் ஆவணவாக்கல் சபையின் தலைவராக பணியாற்றிய மூத்த இலக்கியவாதி ரத்ன ஸ்ரீ விஜேசிங்க தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
மூத்த இலக்கியவாதி, கவிஞர் மற்றும் பாடலாசிரியர் ரத்ன ஸ்ரீ விஜேசிங்க, புத்தசாசனம், சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவியால் 2024 டிசம்பர் 16 திகதியன்று தேசிய நூலகம் மற்றும் ஆவணச்சேவைகள் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள பதவி விலகல் கடிதம்
இந்நிலையில் தற்போது அவர் திடீரென தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான முக்கிய தகவல்களின்படி, எதிர்வரும் ஆகஸ்ட் 01 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவரது பதவி விலகல் கடிதம் ஏற்கனவே அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
எனினும் இதுவரை அவரது பதவி விலகலுக்கான காரணம் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே தனது பொறுப்பில் உள்ள உத்தியோகபூர்வ ஆவணங்களையும் உடைமைகளையும் சபை அலுவலத்தில் முறைப்படி ஒப்படைப்பதற்காக அவர் இன்று (30) தனது அலுவலகத்திற்கு வருகை தரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிறந்த நாள் விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு! வங்கி கணக்கிலிருந்து கைமாற்றப்பட்ட பணம் - சிக்கிய சந்தேகநபர்
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri