எல்லாவல நீர்வீழ்ச்சியில் மூழ்கி காணாமல்போன நான்கு இளைஞர்களும் சடலங்களாக மீட்பு
மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் (21.03.2023) மாலை ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், ஏனைய மூவரினதும் சடலங்கள் இன்றைய தினம் (22.03.2023) காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 பேர் கொண்ட இளைஞர்கள் குழு ஒன்று, நேற்று முற்பகல் அங்கு நீராடச் சென்ற போது, அவர்களில் 4 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.

சடலங்கள் மீட்பு
கல்முனை, காத்தான்குடி மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த, 20 முதல் 22 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களே இவ்வாறு காணாமல்போயிருந்தார்கள்.
அவர்களைத் தேடும் பணிகளில் பொலிஸார், மீட்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam