மஸ்கெலியாவில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தைப்புலி (Photos)
மஸ்கெலியா – பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்றின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே குறித்த சிறுத்தையின் உடல் இன்று (29.11.2023) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
உயிரிழந்த சிறுத்தை
உயிரிழந்த சிறுத்தையானது சுமார் 04 அடி உயரமும் 06 அடி நீளமும் கொண்டது எனவும் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த பொறியில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் சிறுத்தையின் உடலை நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த தோட்டத்தில் சில மாதங்களுக்கு மேலாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதுடன் லயன் குடியிருப்பு பகுதிகளுக்கும் சிறுத்தைகள் வந்துச் சென்றுள்ளதாகவும், காவலுக்காக வளர்க்கப்படுகின்ற நாய்களையும் சிறுத்தைகள் வேட்டையாடி உண்ணுவதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
