பட்டிருப்பு பாலத்திற்கு அருகிலிருந்து மோட்டார் குண்டு மீட்பு
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு பாலத்திற்கு அருகாமையிலிருந்து மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டதாக இன்று களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு வாவியின் பாட்டிருப்பு பாலம் அமைந்துள்ள பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் வலையில் குண்டு ஒன்று சிக்கியுள்ளது.
இவ்விடயம் குறித்து மீனவர்கள் உடனடியாக களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
உடன் ஸ்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உப்புல் குணவர்த்தன மற்றும் களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட குழுவினர் குண்டைப் பார்வையிட்டுள்ளனர்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவு பெற்ற பின்னர் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினரால் இக்குண்டு செயலிழக்கச் செய்வதற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.









தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 மணி நேரம் முன்

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam
