மகிந்த குறித்து எழுந்துள்ள சர்ச்சை: நெருக்கடியில் அரசு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசித்த விஜேராம உத்தியோகபூர்வ இல்லம் குறித்து அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் உண்மைகளை அறியாமல் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் அறிக்கைகளை வெளியிடுவதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப்பேச்சாளர் வழக்கறிஞர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
மேலும், உத்தியோகபூர்வ இல்லத்தை கையளிப்பு செய்வது, சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களில் ஏற்பட்ட தாமதமே காரணம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச சொத்துக்களை கையளிப்பதற்கு ஒரு முறையான நடைமுறை உள்ளது என்றும், அந்த நடைமுறைக்கு அரச அதிகாரிகள் உடனடியாக பதிலளிக்கத் தவறியதால் உத்தியோகபூர்வ இல்லத்தை கையளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தை கையளிப்பு செய்யவில்லை என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் தெரிவித்த தவறான அறிக்கை, உண்மையை முழுமையாக மறைக்கும் அறிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் நீக்கம்
இந்த உத்தியோகபூர்வ இல்லத்தை எவ்வாறு முறையாக ஒப்படைக்க வேண்டும் என்பது குறித்து ஜனாதிபதியின் செயலாளர் 2025.09.24 அன்று தங்களுக்கு எழுத்துப்பூர்வ அறிவிப்பை அனுப்பியுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதன்படி, உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் மற்றும் பிற அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் ஏதேனும் இருந்தால், அவற்றைதெளிவான முறையில் ஒப்படைக்க வேண்டும் என்றும், பின்னர், தனிப்பட்ட உடைமைகள் அகற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, அரச இல்லத்தில் உள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான பொருட்களை முறையாகப் பட்டியலிடுமாறு நேற்று ஜனாதிபதி செயலாளரிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கும் மசோதா சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பில் உள்ள விஜேராம மாவத்தையில் உள்ள அரச பங்களாவிலிருந்து வெளியேறி தங்காலை பெலியத்தவிலுள்ள தனது இல்லத்தில் தங்கியுள்ளார்.
தங்காலையை சென்றடைந்த மகிந்த ராஜபக்சவுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டிருந்ததுடன், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் அவரை சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 மணி நேரம் முன்

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri
